25/9/2021 அகஸ்தியர் அருள்வாக்கு

 

 1) கேரளா குஜராத் மகாராஷ்டிரா ஹரியானா போன்ற மாநிலங்களில் நோய் தொற்று அதிகமாக பரவும். இது கேரளாவில் தான் மிக அதிகமாக பாதிக்கும் மேலும் இங்கு குழந்தைகள் நிறைய இறக்கும் நிலை உள்ளது.

2) மூன்றாவது அலையை பற்றி இப்பொழுது கூறுவார்கள். மாநிலங்களின் எல்லைகளில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது இல்லையென்றால் நோய் தொற்று அதிகமாக பரவும்.

3)தமிழ்நாட்டில் தடுப்பூசி எல்லோரும் போட சொல்வதனால் இங்கு இறப்பு மிகவும் கம்மியாக இருக்கும்.

4) அமெரிக்கா ஐரோப்பா மற்றும் பிரேசில் நாடுகளில் நோய் தொற்று அதிகமாகும்.

5) பள்ளிக்கூடங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

6) டிசம்பர் மாதம் கொண்டு வெளிநாடுகளில் பல பிரச்சனைகள் ஏற்படும் முக்கியமாக இதுவரை பார்க்காத குளிர் அங்கு வந்து மக்களை அதிகம் பாதிக்கும்.

7) நம் தமிழ்நாட்டிலும் இதுவரை நாம் பார்க்காத குளிரை பார்க்கப்போகிறோம். எல்லா வருடமும் டிசம்பர் மாதத்தில் தான் குளிர் வரும் ஆனால் இந்த வருடம் சீக்கிரம் ஆரம்பித்துவிடும். அதுவும் அக்டோபர் மாதம் கொண்டே குளிர் ஆரம்பித்துவிடும்.

8) அதேபோல் எல்லா நாட்டிலும் உஷ்ணம் மிக மிக அதிகமாக இருக்கும் இதுவரை காணாத அளவு எல்லா நாட்டிலும் உஷ்ணம் இருக்கும்.

9) ஒரு மாநிலத்தில் மறுபடியும் மழை வெள்ளத்தினால் ஒரு பேரிடர் உண்டாகும் அங்கு பேரிடர் குழு வந்து மக்களை காப்பாற்றும்.

10) அதேபோல் தமிழ்நாட்டிலும் சிறுதளவு வெள்ள அபாயம் உண்டு மழை 27ம் தேதி முதல் ஆரம்பம் ஆகும்

11) ஒரு சில நாடுகளில் தளர்வுகள் ஏற்பட்டு விமான பயணங்கள் தொடங்கும்.

12) அமெரிக்காவில் ஒரு பெரிய மாகாணத்தில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படப் போகிறது மேலும் அமெரிக்காவில் ஒரு பெரிய வெள்ள பெருக்கு ஏற்படும். மக்கள் அங்கு பிரச்சனை ஆவதை பார்ப்பார்கள்.

13) இரண்டு நாடுகளில் புதிய அதிபர்கள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.

14) இரண்டு கிரகங்களின் சேர்க்கையை பார்க்கப்போகிறோம் அது ஒன்றாக போவதே பார்ப்போம்.

15) அதேபோல் இந்த டிசம்பர் மாதத்திற்குள் ஒரு வால் நட்சத்திரம் பார்ப்போம்.

 

16) கர்நாடகாவில் ஒரு பெரிய அரசியல் குழப்பங்கள் அதனால் பெரிய பிரச்சனை ஏற்படும்.

 17) ஐரோப்பாவில் உள்ள நாடுகள் சேர்ந்து கொண்டு ஒரு நாட்டை எதிர்ப்பார்கள் அதனால் பெரிய பிரச்சினை ஏற்படும்.

 18) கனடாவில் சில அரசியல் குழப்பங்கள் ஏற்படும்.

19) டெல்லியிலும் ஒரு அரசியல் பிரச்சனை ஏற்படும்.

20) இன்னும் ஒரு வாரத்திற்குள் பெரிய சூறாவளி காற்று வீசும் அதன் மூலமாக மழை வரும் அதனால் கடலும் சீற்றமாக காணப்படும்.

21) உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடையும் இதை யாராலும் மாற்ற முடியாது.

22) அடுத்த வருடம் நிறைய பொருளாதாரத்தில் குழப்பங்கள் ஏற்படும் அதனால் எல்லாப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக ஏறும்.

23) தங்கம் இன்னும் சிறிது விலை குறையும் ஆனால் மறுபடியும் அது அதிகமாக விலை ஏறிவிடும்.

24) பங்குசந்தைகளில் புதுவிதமான வர்த்தகங்கள் ஆரம்பிப்பார்கள்

25) ஐரோப்பாவில் இருந்து ஒரு முக்கியமான அதிபர் இங்கு வந்து நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பேசிவிட்டு செல்வார்.

26) இந்திய அரசாங்கம் புது முயற்சியாக கடல்வழி போக்குவரத்து மற்றும் வியாபாரம் தொடங்கும்.

27) இன்னும் 4 மாதங்களில் வெளிநாட்டு பயணங்கள் எல்லாம் ஆரம்பம் ஆகும் சில நாடுகள் எல்லாம் திறந்து விட்டுவிடுவார்கள்.

28) ஆனால் இங்கு நான்கு மாநிலங்களில் மட்டுமே அதிகமான பாதிப்புகள் உண்டு மத்திய அரசு இதற்கு தடுப்பு முயற்சி செய்யும்.

29) வெள்ளமும் இருக்கு வெப்பசலனமும் இருக்கு அதற்கு தகுந்த முறையில் நாம் ஏற்கனவே சொன்னது போல் நமது உணவு பழக்கம் மாற்றம் செய்ய வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது.

30) இந்த குரோன நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது ஆனாலும் இயற்கையின் சீற்றங்கள் மறுபக்கம் இருப்பதால் இரண்டும் சேர்ந்து கொண்டு மனித குலத்திற்கு பெரிய சவாலாக அமையவுள்ளது.

31) பேரிடர்கள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது சூரியனுடைய வெப்பம் அதிகமாகிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகமாகிறது. இதனால் பூமியில் உள்ள அனைத்து பனி மலைகளும் உருகுகின்றன.

32) இதனால் கடல் மட்டம் உயரும் இதனால் சீனா ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு பாதிப்புகள் உண்டு.

33) பூமி உஷ்ணம் அதிகமாவதால் இந்தோனேசியா ஜெர்மனி மலேசியா ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் எரிமலைகள் வெடிக்கும் அபாயம் உண்டு.

34) இந்த பாதிப்புகள் இன்னும் நான்கு வருடங்கள் உள்ளது 2025 வரை இந்த பேரிடர்கள் உள்ளது இதனால் அதிகமாக நோய்கள் உருவாகும் நிலை உள்ளது

35)இந்த சூரிய வெப்பசலனத்தினால் அதிகமாக தோல் நோய்கள் உருவாகும்.

36) நமது உணவு பழக்கம் முற்றிலும் மாறுபடவேண்டும்

கீரை வகைகள் சாப்பிட வேண்டும்.

37) இன்னும் நான்கு ஆண்டுகள் நிறைய அழிவுகள் ஏற்படும் அதனால் மாற்றங்கள் ஏற்படும்.

38) ஒரு புதிய ஊரே உருவாகும்.அது இமயமலையில் உருவாகும்.

39) 2024 கடல் மட்டம் உயரும்.சுமார் இருபது அடி உயரம் வரை வளரும்.

40) 2030ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் இடங்களில் புதியதாக ஊர் உருவாகும்.

41) நம் தமிழ் நாடு கடல் ஓர பகுதிகளில் வாழும் மக்கள் கடற்கரையில் இருந்து இருபது கிலோ மீட்டர் உள்ளே வருவது நல்லது.

42) உலகம் முழுவதும் உள்ள அனைவரும் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் செய்வார்கள் அதனால் விவசாயத்தை மறந்து விடுவார்கள் இதனால் உணவு பஞ்சம் உலகம் முழுவதும் ஏற்படும்.

43) இந்தியா விவசாயத்தை ஆதரிக்க வேண்டும். எல்லோர் வீட்டிலும் காய்கறிகள் பயிரிடுதல் வேண்டும்.

44) கீழடி ஆராய்ச்சி நிறைய புதிய விஷயங்கள் தெரிய வரும் பெரிய பொக்கிஷம் கிடைக்கும். இதன் அளவு சுமார் ஆறு மைல் சுற்றளவு கொண்டது.ஆனால் தற்போது முக்கால் கிலோமீட்டர் அளவு மட்டுமே ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

45) தமிழர் பண்பாடு ஒரிசா குஜராத் அசாம் வரை விரிந்து உள்ளது.கல்வி ஆராய்ச்சி மருத்துவ ஆராய்ச்சி பற்றிய விவரம் தெரியவரும்.

46) பின் காலத்தில் இந்த இடம் உலகத்திற்கு ஒரு பெரிய பொக்கிஷமாக அமையும். ஒரு பெரிய அருங்காட்சியகம் அமையும்.இதுவரை கண்டுபிடித்தது இல்லாமல் புதியதாக நிறைய கண்டுபிடிப்பார்கள்.

25/09/2021  அகஸ்தியர் அருள்வாக்கு

 

 1) சென்னையிலும் தமிழ்நாட்டிலும் 29 ஆம் தேதியிலிருந்து மழை ஆரம்பிக்கும் இந்த மழை அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நீடிக்கும்.

 

2)  வெளிநாட்டிலும் 15ஆம் தேதி வரை அதிக மழை பெய்யும்.

 

3) உலகம் முழுவதும் பிரச்சனைகள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.

 

4) சீனா தன்னுடைய பண மதிப்பைக் கூட்டுகிறது இதனால் மற்ற நாடுகளின் பொருளாதாரம் பெரிய பாதிப்பு அடையும். இதன் மூலமாக  உலக நாடுகள் பிரச்சனைகள் உருவாக்கும்.

 

5) உலக நாடுகள் அனைத்திலும் பண தட்டுப்பாடுகள் ஏற்படும்.

 

6) இரண்டு மூன்று நாடுகளில் பணப் பிரச்சனைகள் ஏற்படும்.

 

8) கர்நாடக அரசியலில் பெரிய பிரச்சனைகள் குழப்பங்கள் ஏற்படும். அங்கு முதலமைச்சருக்கு பிரச்சினை ஏற்படும்.

 

 9)தெலுங்கானாவில் ஒரு அரசியல் பிரச்சினை ஏற்படும்.

 

10) டெல்லியில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும். டெல்லியில் அரசியல் குழப்பம் ஏற்படும். அதன் பின்னர் அங்கு ஓர் பெரிய கலவரம் ஏற்படும்.

 

 

11) நம் நாடு முழுவதும் இந்த கொரோணாவின் தாக்கம் வெகுவாக குறைந்துவிடும். இதனால் இறப்புகள் குறைந்துவிடும்.

 

 

 

12) டிசம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உண்டு.

 

13) நமது நாட்டு எல்லையிலும் ஒரு பிரச்சனை ஏற்படும். அதேபோல் ஸ்ரீநகர் அருகிலும் ஓர் பெரிய பிரச்சனைகள் ஏற்படும். எல்லையில் பிரச்சினை உள்ளது.

 

 

 

14) வெளிநாட்டில் ஓர் போர் விமானம் எரிந்து விழும் நிலை உள்ளது.

 

15) இன்னொரு விமானம் வானில் கோளாறு ஏற்பட்டு  நிறைய மக்கள் இறப்பார்கள்.

 

16) அடுத்த மாதம் ஒரு சில கிரகங்களின் சேர்க்கைகளை நாம் பார்க்கப் போகிறோம்.

 

17) இனிமேல் சந்திரனின் வெளிச்சத்தை அதிகமாவதை நாம் பார்ப்போம்.

 

18)சீனாவில் நிறைய குழப்பங்கள் இருந்தாலும்  சீனாவில் மற்றும் ஒரு புதிய வகை வைரஸ் உருவாகிக் கொண்டு இருக்கிறது. இது தான் இவர்களுக்கு பிரச்சினை ஆகும். இது உலக நாடுகளில் பரவாது.

 

19) அமெரிக்காவில் பெரிய பொருளாதார பிரச்சனை ஏற்படும். அங்கு நிறைய தட்டுப்பாடுகள் வரும். அரசாங்கம் நிறைய கட்டுப்பாடுகளை கொண்டு வரும். இந்தத் தடைகளை இவர்கள் கொண்டு வருவதினால் உலகநாடுகள் நிறைய இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்.பல நாடுகள் இதனால் பிரச்சனையை உருவாக்கும்.

 

20) வரக்கூடிய இன்னும் இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்கள் வந்து நிறைய குழப்பங்கள் ஏற்படும்.

 

 21)அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து ஒரு சுமூகமான சூழ்நிலை உருவாவதை நாம் பார்ப்போம்.

 

 22) உலக நாடுகள் அனைத்திலும் நிறைய மாற்றங்கள் கொண்டு வருவார்கள்.

 

23) பம்பாய் அல்லது டில்லியில் ஒரு பழம்பெரும் நடிகை இறப்பதை நாம் பார்ப்போம்.

 

24) அதேபோல் தமிழ் நாட்டில் ஓர் நடிகருக்கு ஓர் பிரச்சினை ஏற்படும்.

 

25) கடலோர பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும்.

 

26) ஐரோப்பாவில் மற்றுமொரு பெரிய காடு நெருப்பு பற்றிக் கொள்ளும்.

 

 27)ஐரோப்பாவிலும் சில அரசியல் குழப்பங்களும் அரசியல் மாற்றங்களும் ஏற்படும்.

 

28) கீழடியில் செய்துகொண்டிருக்கும் ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான ஆவணம் நமக்கு கிடைக்கும் ஒரு முக்கியமான வழிமுறைகளும் நமக்கு தெரியவரும்.

 

 

25/09/2021 Agasthiyar arulvaakku

 

1. Chennai and Tamilnadu will receive rains from 29th of this month till 15th Oct.

 

2. Foreign countries also will receive rains till 15th Oct.

 

3. There are lots of problems through out the world.

 

4. China will increase its money value. This will affect the other countries economy. The world countries will oppose this change.

 

5. The world countries will face money deficit.

 

6.  Two three countries will face economic crisis.

 

7. There will be confusion in Karnataka politics and there will be problems for Karnataka chief minister

 

8. There will be problem in Telengana politics.

 

9. There will be a big issue in Delhi politics and there will be big riots in Delhi.

 

10. The Corona infections will reduce drastically and death rate will be minimal.

 

11. There is a chance for schools to reopen from December.

 

12. There will be problems in our border and in Srinagar too.

 

13. A war aircraft might get into fire accident in a foreign country

 

14. Another passenger aircraft will get technical issue and it might falls down. This might cause lots of lives loss

 

 

15. We will see few planets merge next month

 

16. Moon will be more brighter than earlier.

 

17. China is facing lots of confusions and internal problems. There is a new virus spreading in china. This will cause huge damage to them. This will not spread to other countries

 

18. America will face severe economic crisis. There will be shortage of food and other things. Government will impose very strict rules and bans. Other countries will oppose these rules and bans.

 

19. Next two months , we will see lots of confusions across the world.

 

20. All problems will slowly get sorted from coming Jan.

 

21. There will lots of changes in all the countries

 

22. We will see an old actress die in Bombay or in Delhi

 

23. There will be problem for a Tamil actor

 

24. There will be heavy rains in seashore

 

25. There will be forest fire in Europe.

 

26. There will be confusions in European politics  and there will be some changes .

 

27. Keezhadi research will bring out an important evidence. This will bring out very critical information to the world.