18.12.2021 அகஸ்தியர் அருள்வாக்கு

 

1)  இந்த நோய் இங்கே பரவுவதற்கு காரணம் என்னவென்றால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் மூலமே இந்த நோய் பரவுகிறது. வெளிநாட்டு பயணிகளை இங்கே வருவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் அப்பொழுது தான் இங்கு நோயின் தாக்கம் குறையும்.

 

2)  அமெரிக்கா பிரிட்டன் மற்றும் வெள்ளையர் நாடுகளில் இந்த நோயின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும்.இறப்புகள் அங்கு அதிகம்.இங்கு முழு ஊரடங்கு உத்தரவு வரும்.

 

3)  தமிழ்நாட்டிலும் நோய் பரவும் ஆனால் இறப்புகள் குறைவாகவே இருக்கும்.

 

4)  ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிறைய பீதிகள் கிளம்பும்.மக்கள் அலைமோதும் நிலை உள்ளதுவதந்திகள் கிளம்பும் யாரும் அதை நம்பவேண்டாம்.

 

5)  நமது சாப்பாட்டில் கட்டுபாடு இருக்க வேண்டும்.கோழி சாப்பிட கூடாது.இந்த நோய் போகும் வரை கீரை வகைகள் சேர்த்து கொள்ள வேண்டும்.முக கவசம் அணிவது. கை ✋✋ கழுவுதல் வேண்டும்.இன்னும் ஏழு மாதங்கள் கடந்து செல்ல வேண்டும்.

 

6)  மறுபடியும் தங்கம் விலை சிறிது குறையும் அதன் பின்னர் அதன் விலை ஏறி விடும்.

 

7) உலக நாடுகள் அச்சுறுத்தல்கள் வகையில் பெரிய பிரச்சினைகள் வருவது போல் வந்து சென்றுவிடும்.

 

8)  அமெரிக்காவில் ஒரு பெரிய பொருளாதார தடை வரும். அதன் மூலம் பல புதிய வரிகள் போடுவார்கள். இதனால் அங்குபல பிரச்சினைகள் வரும். இதனால் மேலும் பல நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படும்.

 

9) அமெரிக்காவின் வரி விதிப்புகளால் இந்தியாவிலும் சில பிரச்சினைகள் ஏற்படும் ஆனால் பின்னர் சரி ஆகும்.

 

10)  சிங்கப்பூர் மலேசியாவில் நோய் பரவல் அதிகமாக இருக்கும்.அங்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.

 

11)  மார்ச் மாதம் 16 தேதி வரை பெரிய பெரிய உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு வரும்.

 

12)  இந்தியாவில் இரண்டு புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள்.அதில் ஒன்று மிகவும் சிறப்பாக இருக்கும்.

 

13) ஒரு மழை உருவாகும் நிலை உள்ளது அது புயலாக மாறும் நிலை உள்ளது.கரை ஓர மக்களுக்கு மழை பாதிப்புகள் ஏற்படும்.இது மற்ற மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.வேறு ஒரு நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஒரு வெள்ளையர் நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

14) டிசம்பர் 23 தேதி கடலோர மக்களுக்கு பாதுகாப்பு தேவை. அங்கு கடல் நீர் உள்ளே வரலாம்.

 

 

15) ஒரு நாட்டில் மிகப்பெரிய மலை ???????? சரிவு ஏற்படும். இது சீனாவில் நடக்கும் மேலும் வேறு ஒரு நாட்டிலும் நடக்கும்.

 

16) ஒரு சரணாலயத்தில் நிறைய ???????? பறவைகள் கூட்டமாக இறப்பதை பார்ப்போம்.

 

17) பல நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு நில நடுக்கங்கள் ஏற்படும்.இது பல இடங்களில் உணரப்படும்.

 

18) வட இந்தியாவில் ஜனவரி 25 தேதி ஒரு பெரிய அரசியல் பிரச்சினை ஏற்படும். அதேபோல் வேறு ஒரு பிரச்சினை உருவாகி அதுவும் சரியாகும்.

19) ஒரு நாட்டில் விமானம் ஒன்று உடைந்து விழுவதை பார்ப்போம்.அதேபோல் மற்றும் ஒரு சம்பவம் நடக்கும்.

 

20) வெளிநாடுகளில் இந்த நோய் மிகவும் சீக்கிரமாக பரவுவதை நாம் பார்ப்போம்.

 

21) கேரளா.கர்நாடகாவில் வேறு ஒரு புதிய வகை நோய் பரவும் அதை கொரோணா என்று நினைக்ககூடாது.