அகஸ்தியர் அருள்வாக்கு

 

1) கேரளா குஜராத் மகாராஷ்டிரா ஹரியானா போன்ற மாநிலங்களில் நோய் தொற்று அதிகமாக பரவும். இது கேரளாவில் தான் மிக அதிகமாக பாதிக்கும் மேலும் இங்கு குழந்தைகள் நிறைய இறக்கும் நிலை உள்ளது.

 

2) மூன்றாவது அலையை பற்றி இப்பொழுது கூறுவார்கள். மாநிலங்களின் எல்லைகளில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது இல்லையென்றால் நோய் தொற்று அதிகமாக பரவும்.

 

3)தமிழ்நாட்டில் தடுப்பூசி எல்லோரும் போட சொல்வதனால் இங்கு இறப்பு மிகவும் கம்மியாக இருக்கும்.

 

4) அமெரிக்கா ஐரோப்பா மற்றும் பிரேசில் நாடுகளில் நோய் தொற்று அதிகமாகும்.

 

5) பள்ளிக்கூடங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

 

6) டிசம்பர் மாதம் கொண்டு வெளிநாடுகளில் பல பிரச்சனைகள் ஏற்படும் முக்கியமாக இதுவரை பார்க்காத குளிர் அங்கு வந்து மக்களை அதிகம் பாதிக்கும்.

 

7) நம் தமிழ்நாட்டிலும் இதுவரை நாம் பார்க்காத குளிரை பார்க்கப்போகிறோம். எல்லா வருடமும் டிசம்பர் மாதத்தில் தான் குளிர் வரும் ஆனால் இந்த வருடம் சீக்கிரம் ஆரம்பித்துவிடும். அதுவும் அக்டோபர் மாதம் கொண்டே குளிர் ஆரம்பித்துவிடும்.

 

8) அதேபோல் எல்லா நாட்டிலும் உஷ்ணம் மிக மிக அதிகமாக இருக்கும் இதுவரை காணாத அளவு எல்லா நாட்டிலும் உஷ்ணம் இருக்கும்.

 

9) ஒரு மாநிலத்தில் மறுபடியும் மழை வெள்ளத்தினால் ஒரு பேரிடர் உண்டாகும் அங்கு பேரிடர் குழு வந்து மக்களை காப்பாற்றும்.

10) அதேபோல் தமிழ்நாட்டிலும் சிறுதளவு வெள்ள அபாயம் உண்டு மழை 27ம் தேதி முதல் ஆரம்பம் ஆகும்

 

11) ஒரு சில நாடுகளில் தளர்வுகள் ஏற்பட்டு விமான பயணங்கள் தொடங்கும்.

 

12) அமெரிக்காவில் ஒரு பெரிய மாகாணத்தில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படப் போகிறது மேலும் அமெரிக்காவில் ஒரு பெரிய வெள்ள பெருக்கு ஏற்படும். மக்கள் அங்கு பிரச்சனை ஆவதை பார்ப்பார்கள்.

 

13) இரண்டு நாடுகளில் புதிய அதிபர்கள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.

 

 14) இரண்டு கிரகங்களின் சேர்க்கையை பார்க்கப்போகிறோம் அது ஒன்றாக போவதே பார்ப்போம்.

 

15) அதேபோல் இந்த டிசம்பர் மாதத்திற்குள் ஒரு வால் நட்சத்திரம் பார்ப்போம்.

 

16) கர்நாடகாவில் ஒரு பெரிய அரசியல் குழப்பங்கள் அதனால் பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

 17) ஐரோப்பாவில் உள்ள நாடுகள் சேர்ந்து கொண்டு ஒரு நாட்டை எதிர்ப்பார்கள் அதனால் பெரிய பிரச்சினை ஏற்படும்.

 

 18) கனடாவில் சில அரசியல் குழப்பங்கள் ஏற்படும்.

 

19) டெல்லியிலும் ஒரு அரசியல் பிரச்சனை ஏற்படும்.

 

 20) இன்னும் ஒரு வாரத்திற்குள் பெரிய சூறாவளி காற்று வீசும் அதன் மூலமாக மழை வரும் அதனால் கடலும் சீற்றமாக காணப்படும்.

 

21) உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடையும் இதை யாராலும் மாற்ற முடியாது.

 

22) அடுத்த வருடம் நிறைய பொருளாதாரத்தில் குழப்பங்கள் ஏற்படும் அதனால் எல்லாப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக ஏறும்.

 

23) தங்கம் இன்னும் சிறிது விலை குறையும் ஆனால் மறுபடியும் அது அதிகமாக விலை ஏறிவிடும்.

 

 24) பங்குசந்தைகளில் புதுவிதமான வர்த்தகங்கள் ஆரம்பிப்பார்கள்

 

25) ஐரோப்பாவில் இருந்து ஒரு முக்கியமான அதிபர் இங்கு வந்து நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பேசிவிட்டு செல்வார்.

 

26) இந்திய அரசாங்கம் புது முயற்சியாக கடல்வழி போக்குவரத்து மற்றும் வியாபாரம் தொடங்கும்.

 

27) இன்னும் 4 மாதங்களில் வெளிநாட்டு பயணங்கள் எல்லாம் ஆரம்பம் ஆகும் சில நாடுகள் எல்லாம் திறந்து விட்டுவிடுவார்கள்.

 

28) ஆனால் இங்கு நான்கு மாநிலங்களில் மட்டுமே அதிகமான பாதிப்புகள் உண்டு மத்திய அரசு இதற்கு தடுப்பு முயற்சி செய்யும்.

 

29) வெள்ளமும் இருக்கு வெப்பசலனமும் இருக்கு அதற்கு தகுந்த முறையில் நாம் ஏற்கனவே சொன்னது போல் நமது உணவு பழக்கம் மாற்றம் செய்ய வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது.

 

30) இந்த குரோன நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது ஆனாலும் இயற்கையின் சீற்றங்கள் மறுபக்கம் இருப்பதால் இரண்டும் சேர்ந்து கொண்டு மனித குலத்திற்கு பெரிய சவாலாக அமையவுள்ளது.

 

31) பேரிடர்கள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது சூரியனுடைய வெப்பம் அதிகமாகிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகமாகிறது. இதனால் பூமியில் உள்ள அனைத்து பனி மலைகளும் உருகுகின்றன.

 

32) இதனால் கடல் மட்டம் உயரும் இதனால் சீனா ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு பாதிப்புகள் உண்டு.

 

33) பூமி உஷ்ணம் அதிகமாவதால் இந்தோனேசியா ஜெர்மனி மலேசியா ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் எரிமலைகள் வெடிக்கும் அபாயம் உண்டு.

 

34) இந்த பாதிப்புகள் இன்னும் நான்கு வருடங்கள் உள்ளது 2025 வரை இந்த பேரிடர்கள் உள்ளது இதனால் அதிகமாக நோய்கள் உருவாகும் நிலை உள்ளது

 

35)இந்த சூரிய வெப்பசலனத்தினால் அதிகமாக தோல் நோய்கள் உருவாகும்.

 

36) நமது உணவு பழக்கம் முற்றிலும் மாறுபடவேண்டும்

கீரை வகைகள் சாப்பிட வேண்டும்.

 

37) இன்னும் நான்கு ஆண்டுகள் நிறைய அழிவுகள் ஏற்படும் அதனால் மாற்றங்கள் ஏற்படும். 

 

38) ஒரு புதிய ஊரே உருவாகும்.அது இமயமலையில் உருவாகும்.

 

39) 2024 கடல் மட்டம் உயரும்.சுமார் இருபது அடி உயரம் வரை வளரும்.

 

40) 2030ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் இடங்களில் புதியதாக ஊர் உருவாகும்.

 

41) நம் தமிழ் நாடு கடல் ஓர பகுதிகளில் வாழும் மக்கள் கடற்கரையில் இருந்து இருபது கிலோ மீட்டர் உள்ளே வருவது நல்லது.

 

42) உலகம் முழுவதும் உள்ள அனைவரும் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் செய்வார்கள் அதனால் விவசாயத்தை மறந்து விடுவார்கள் இதனால் உணவு பஞ்சம் உலகம் முழுவதும் ஏற்படும்.

 

43) இந்தியா விவசாயத்தை ஆதரிக்க வேண்டும். எல்லோர் வீட்டிலும் காய்கறிகள் பயிரிடுதல் வேண்டும்.

 

 

44) கீழடி ஆராய்ச்சி நிறைய புதிய விஷயங்கள் தெரிய வரும் பெரிய பொக்கிஷம் கிடைக்கும். இதன் அளவு சுமார் ஆறு மைல் சுற்றளவு கொண்டது.ஆனால் தற்போது முக்கால் கிலோமீட்டர் அளவு மட்டுமே ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

 

45) தமிழர் பண்பாடு ஒரிசா குஜராத் அசாம் வரை விரிந்து உள்ளது.கல்வி ஆராய்ச்சி மருத்துவ ஆராய்ச்சி பற்றிய விவரம் தெரியவரும்.

 

46) பின் காலத்தில் இந்த இடம் உலகத்திற்கு ஒரு பெரிய பொக்கிஷமாக அமையும். ஒரு பெரிய அருங்காட்சியகம் அமையும்.இதுவரை கண்டுபிடித்தது இல்லாமல் புதியதாக நிறைய கண்டுபிடிப்பார்கள்.